(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாணயம் அச்சிடலுக்கு அடிமையாகியுள்ளார். கப்ராலின் சாதனையை இவர் குறுகிய காலத்திற்குள் முறியடித்துள்ளார்.
ஆகவே மத்திய வங்கியின் ஆளுநரையும், இந்த அரசாங்கத்தையும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மத்திய வங்கியின் ஆளுநருக்கும்,ஜனாதிபதிக்கும் சொல்வதை செய்யும் பழக்கம் கிடையாது. எல்லையற்ற நாணயம் அச்சிடல் பணவீக்கத்தை அதிகரித்து பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்நலால் வீரசிங்க பதவி ஏற்ற போது குறிப்பிட்டார். ஆனால் இவரே குறுகிய காலத்தில் அதிக நாணயம் அச்சிட்ட மத்திய வங்கி ஆளுநராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் 2020 மார்ச் மாதம் முதல் 2021 செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 1260 பில்லியன் திறைச்சேரி விலைபத்திரங்களை வெளியிட்டார்.ஒரு நாளைக்கு அவர் 2.1 பில்லியன் நாணயத்தை அச்சிட்டார்.
இவரை தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற அஜித் நிவார்ட் கப்ரால் 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு 2.2 பில்லியன் நாணயத்தை அச்சிட்டு முன்னாள் ஆளுநர் லக்ஷ்மனின் சாதனையை முறியடித்தார்.
இவரை தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க கடந்த ஏப்ல் மாதம் 06ஆம் திகதி முதல் கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாளாந்தம் 3.37 பில்லியன் நாணயத்தை அச்சிட்டுள்ளார்.
ஆகவே நாணய அச்சிடலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான லக்ஷ்மன், கப்ரால் ஆகியோர் அடைந்த சாதனையை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க முறியடித்துள்ளார்.
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது,நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் ஏன் நாணயம் அச்சிடப்படுகிறது என்பது கேள்விக்குறியானதாகும். அரச வருமானம் வீழ்ச்சியடையும் போது நாணயம் அச்சிட்டு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM