பாகற்காயின் மருத்துவ குணங்கள் !

Published By: Ponmalar

17 Nov, 2022 | 03:25 PM
image

பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை பாகற்காய் போக்குகிறது.

பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால், குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் நீக்கும்.

நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக போராடுகிறது. இதில் சாரன்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. பாகற்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், பெ. சீரகம் சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

பாகற்காய் சாற்றை எலுமிச்சைச் சாறுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்சினை நீங்கும்.

பாகற்காயை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இதனால், உடலை நோய் தொற்றிலிருந்து காக்கிறது.

தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்து வர, கல்லீரல் பிரச்சினைகள் நீங்கும்.

சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அது தொடர்பான உறுப்புக்கள் அனைத்தையும் சிறப்பாக பாதுகாக்க பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும் பாகற்காய் பயன்படுகிறது. 

வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகத்திற்கு நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

2023-03-22 17:08:33
news-image

வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

2023-03-21 15:44:01
news-image

புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

2023-03-20 15:53:24
news-image

யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-18 16:51:18
news-image

பச்சையாக சாப்பிடாதீர்கள்!

2023-03-18 12:46:01
news-image

ஸ்போண்டிலோஒர்த்ரைடீஸ் எனும் முதுகுத்தண்டு வீக்க பாதிப்பிற்குரிய...

2023-03-18 12:21:25
news-image

கான்ஜுன்க்டிவிடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-16 15:32:11
news-image

இன்சுலினை ஆயுள் முழுதும் பயன்படுத்த வேண்டுமா...?

2023-03-15 14:52:57
news-image

ஹெமடெமிஸிஸ் எனும் ரத்த வாந்தி பாதிப்பிற்குரிய...

2023-03-14 12:49:12
news-image

பக்கவாத பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க உதவும் புனர்வாழ்வு...

2023-03-13 17:09:23
news-image

ஹீமோப்டிசிஸ் எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-03-11 13:10:36
news-image

மெனிஸ்கல் எக்ஸ்ட்ரூஸன் எனும் பாதிப்பிற்குரிய சத்திர...

2023-03-09 13:34:10