90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவ தலைவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாணவ தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வேல ஸ்ரீதம்ம தேரர் ஆகியோர் 90 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர் தயகி ருவான்பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
மாணவ தலைவர்கள் இலக்குவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது சிவில் சமூகத்தினர் மீதும் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை மீதும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது வசந்த முதலிகே கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் ஆகியோருக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உடனடியாக கைவிடவேண்டும்,தடுத்து வைப்பதற்கான உத்தரவை நீடிப்பமை நிறுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்களிற்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பயன்படுத்துவது அளவுக்கதிகமானதாகவும் சரியான அளவில் இல்லாததாகவும் காணப்படுகின்றது எனினும் இலங்கை அதிகாரிகள் அதனை மீண்டும் மீண்டும் விமர்சகர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்களிற்கு எதிராக பயன்படுத்துகின்றனர் அதிருப்தியை முடக்குவதற்காக அமைதியாக்குவதற்காக இதனை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பது இலங்கையின் அரசமைப்பு மற்றும் ஐசிசிபிஆர் ஆகியவற்றின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் மற்றும்; ஒன்றுகூடலிற்கான சுதந்திரம் ஆகியவற்றை மீறும் தெளிவான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் அல்லது அதில் கலந்துகொள்பவர்களை குற்றவாளியாக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்த முடியாது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகள்சர்வதேச தராதரங்களை கொண்டிராத பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும், அதனை பயன்படுத்துவதில்லை என்ற தங்கள் உறுதிமொழியை பின்பற்றவேண்டும்,எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர் தயகி ருவான்பத்திரன பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டும்,சர்வதேச தராதரங்களிற்கு ஏற்றதாக காணப்படாத குற்றச்சாட்டுகளின் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM