எமது தவறுகளை திருத்திக்கொள்ளவே ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டது - ரமேஷ் பத்திரண

Published By: Digital Desk 2

17 Nov, 2022 | 01:11 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு அரசியல் ரீதியில் நட்டஈடு செலுத்தியுள்ளோம்.

இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

எம்மால் இழைக்கப்பட்ட தவறுகளை நாம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறோம் என கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பதவி விலகியவுடன் பொதுஜன பெரமுன தலைமையிலான  அமைச்சரவை முழுமையாக பதவி விலகியது.

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தார். அரசாங்கத்தை பொறுபேற்கும் சவாலை எதிர்க்கட்சி தலைவர் அப்போது ஏற்கவில்லை.

பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில பிரபல்யமான தீர்மானங்களுக்கு இன்று அரசியல் நட்டஈடு செலுத்துகிறோம்.

இழைத்த தவறுகளை திருத்திக் கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம்.

2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து எமது அரசாங்கம்  55 000 பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்களையும் குறைந்த கல்வி தகைமை உடைய 40 000 பேருக்கு அரச தொழில்வாய்ப்புக்களை வழங்கும் வகையில் பிரபல்யமான தீர்மானத்தை எடுத்தது. இது பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.

அத்துடன்  2019 ஆம் ஆண்டு வரிச் சலுகை வழங்கப்பட்டமையால் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடைந்தது. பொருளாதார பாதிப்பு நடுத்தர மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தியது.

பணவீக்கம் அதிகரிப்பினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. அரசாங்கத்தின் தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து அவரது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

கடந்த மாதங்களை விட தற்போது பணவீக்கம், உணவு பணவீக்கம் மற்றும் உணவல்லா பணவீக்கம் சடுதியாக குறைவடைந்து செல்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் பொருளாதார பாதிப்பிற்கு தீர்வு காணலாம். அத்துடன் சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

பொருளாதார பாதிப்பிற்கு அரச கடன்சுமை பிறிதொரு காரணியாக காணப்படுகிறது. இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அரசமுறை கடன் செலுத்தப்பட்டுள்ளது. அரசமுறை கடன் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சியிடம் வலியுறுத்துகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டால் அது சமூக கட்டமைப்பில் பாரிய எதிர்விளைவை தோற்றுவிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன விஜயத்தின் போது குரங்குகள் குறித்த...

2024-12-11 17:48:14
news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு...

2024-12-11 20:39:17
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள்...

2024-12-11 18:33:29