பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான  அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்குள் பொழுதுபோக்கு பெண் விருந்தினர்களை அழைத்துவந்துள்ளதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டுடிருக்கும்  நிலையில், இவர்களுக்கு நேற்று குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வாறான ஒழுங்கு விதிகளை மீறும் செயற்பாடுகளில்  இனிமேலும் ஈடுபட்டால், கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என பங்களதேஷ் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.