போலந்தில் ஏவுகணை வீழ்ந்து வெடித்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டமைக்கான அறிகுறி இல்லை என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.
போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்ததால் இருவர் உயிரிழந்தனர்.
நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் இச்சம்பவம் இடம்பெற்றமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இது தொடர்பாக கூறுகையில், 'இச்சம்பவம் தொடர்பில் எமது விசாரணைகள் தொடர்கின்றன. அதன் பெறுபேறுக்கு நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், அது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவு என்பதற்கான அறிகுறிகள் இல்லை' என்றார்.
யுக்ரைனிய படையினர் ஏவிய விமான எதிர்ப்பு ஏவுகணையொன்றின் விளைவாக இச்சம்பவம் இருக்கலாம் எனவும் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறினார்.
எனினும் இது யுக்ரைனின் தவறு அல்ல எனவும், யுக்ரைன் மீது ரஷ்யா சட்டவிரோத யுத்தத்தை தொடர்வதால் ரஷ்யாவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதேபோன்ற கருத்தை போலந்து ஜனாதிபதி அண்ட்றே டூடாவும் தெரிவித்துள்ளார். இது ஒரு துரதிஷ்டமான விபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரைன் படையினர் ஏவிய சோவியத் காலத்து ஏவுகணையொன்றின் விளைவாக இது இருப்பதற்கான அதி வாய்ப்புள்ளது என ஜனாதிபதி அண்ட்றே டூடா கூறினார்.
முன்னதாக, மேற்படி ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். பைடனின் இக்கருத்தை ரஷ்யா பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM