(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
மீனவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கும் மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெருந்தோட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் வரி மூலம் அல்லாது நாட்டுக்கு வறுமானத்தை ஈட்டிக்கொள்ள அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அதிக வரிகளை விதித்து நாட்டின் வறுமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வகையிலே இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த முறையிலேயே ஆட்சி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் எமது வெளிநாட்டு கடன்கள் பெற்றுக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதால், உள்நாட்டுக்குள்ளே கடன் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இருந்தாலும் கரையோர மாவட்ட மீனவர்களுக்கு 6மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் வீதி புனரமைப்புக்கு 373 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் நாடு இருக்கும் நிலையில் வீதி அபிவிருத்திக்கு இந்தளவு தொகை தேவை தானா என்ற கேள்வி எழுகின்றது.
அத்துடன் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் மீனவர்களுக்கு மாத்திரமல்லாது மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மண்ணெண்ணெய் நிவாரணத்தை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று நிலையான மற்றும் நிலையற்ற வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைச்செவவு அதிகரித்துள்ளது. அவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. அவர்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் காணிகளை பெற்றுக்கொள்ள சுமார் 10 அமைச்சுக்களின் நிறுவனங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது.
இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, மாகாண செயலாளர்கள் அந்த மாகாணத்தில் இருக்கும் காணிகளை இனம் கண்டு, அவர்களே இந்த அனுமதிகளை முறையாக பெற்றுக்கொண்டு, முதலீட்டுச் சபைக்கு வழங்குவதன் மூலம், அங்கிருக்கும் வன்சொப் நிறுவனம் ஊடாக முதலீ்ட்டாளர்கள் காணிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் அமைக்கப்படவேண்டும்.
அவ்வாறானதொரு இலகுவழி முதலீட்டாளர்களுக்கு இல்லாமையால், நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் தரகர்களினால் பணம் பறிக்கப்படும் நிலையே இருந்து வருகின்றது.
வெளிநாடுகளில் வன்சொப் முறையிலான நிறுவனங்கள் இருக்கின்றன. அதன காரணமாக எமது நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM