(எம்.வை.எம்.சியாம்)
மில்லனிய பகுதியில் மாணவர்களை துன்புறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மில்லனிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மூவரின் பிணை கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (16) அனுமதித்துள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் தலா 10 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆசிரியர் ஒருவரின் பணப்பையை திருடியதாக சந்தேகிக்கப்படும் சிறுவர்கள் குழுவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சார்பில் மன்றில் ஆஜராகிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பொலிஸ் பரிசோதகரை உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏற்கனவே இடமாற்றம் செய்துள்ளார். அதேநேரத்தில் கல்வி அமைச்சு பாடசாலையின் அதிபரை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM