இலங்கை போக்குவரத்து சபையின் தேவைக்காக 1000 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 - 46 பயணிகள் செல்லக்கூடிய இரண்டு பகுதிகளுக்கு இரண்டு ஆசனங்கள் அடங்கிய பஸ்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட பஸ்களை திருத்துவதற்கான செலவீனம் அதிகரித்துள்ளமையால், புதிய பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.