சமையல் குறிப்புகள்

Published By: Ponmalar

16 Nov, 2022 | 03:01 PM
image

*இட்லி பொடி செய்யும் போது சிறிது கறிவேப்பிலையைப் போட்டு அரைத்துச் செய்தால் ருசியும் கூடும். உடலுக்கும் நல்லது.

*முளை கட்ட வேண்டிய பயறுவகைகளை நீரில் எட்டுமணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிய விட்டு, ஹாட்பேக்கில் போட்டு மூடிவைத்து, மறு நாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியங்கள் ரெடி.

*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும் அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

*வெங்காயம் நன்றாக வறுபட, வெங்காயத் துண்டுகளை உப்பு தடவி பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

*சுண்டைக்காயை உப்பு, தயிர் விட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வத்தக் குழம்பில் சேர்த்தால் குழம்பு சுவையாகவும், நன்றாகவும் இருக்கும்.

*வத்தக்குழம்பு செய்யும்போது, கடுகு தாளித்தவுடன், மிளகாய் பொடியை வறுத்துப்பின் புளியைக் கரைத்து விட்டால் குழம்பு மணமாக இருக்கும்.

*அவ்வப்போது மிக்ஸி ஜாரில் சிறிதளவு கல் உப்பை போட்டு அரைத்தால், மிக்ஸி பிளேடுகள் கூர்மை மங்காமல் இருக்கும். அரைத்த உப்பை டேபிள் சால்ட்டாகவும் பயன்படுத்தலாம்.

*சேனைக்கிழங்கினை வேகவைக்கும் முன் வெறும் பாத்திரத்தில் சிறிது உப்பை போட்டு, அடுப்பில் வைத்து அது சூட்டில் வெடிக்கும் வரை, வறுத்து பின்னர் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும் கிழங்கை போட்டால் கிழங்கு விரைவில் வெந்துவிடும்.

*சாம்பாரில் முருங்கைக்காயை அப்படியே நறுக்கிப் போடாமல் இரண்டாக கீறிப் போட்டால் சுவையும், மணமும் கூடும்.

*மோர்க்குழம்பு செய்யும்போது, மாம்பழத்தை துண்டாக வெட்டி போட்டால் மோர் குழம்பின் சுவை இனிப்பு+புளிப்பு கலந்த சுவையுடன் சூப்பராக இருக்கும்.

*தோசை வார்க்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால் கல்லில் தோசை ஒட்டாது. எண்ணெய்ச் செலவும் குறையும். உடம்புக்கும் நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்