வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு

Published By: Ponmalar

16 Nov, 2022 | 02:50 PM
image

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் மாணவிகள் தமிழ் தின போட்டிகள் 2022 இல் தேசிய மட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளதையடுத்து அவர்களுக்கான பராட்டு விழா கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் யோகராணி சிவபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான  அபிவிருத்திகள் கிளையின் பணிப்பாளர் எஸ். முரளிதரன், கலந்துக் கொண்டு மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்வில் அதிபரின் தலைமையுரையில்…


கொழும்பு மாநகரில் மிகவும் பெருமைவாய்ந்த நீண்ட வரலாறை கொண்ட ஒரு பெண்கள் மகளிர் கல்லூரிக்கு நான் அதிபராக நியமிக்கப்பட்டமையையிட்டு மிகவும் பெருமையடைகின்றேன்.

எனது 32 வருட கல்விபுல வாழ்க்கையிலே நான் இவ்வளவு காலமும் ஆண்கள் பாடசாலையில் தான் கல்வி கற்பித்திருக்கின்றேன்.

தமிழ் பிரிவின் அதிபராக டீ. எஸ். சேனாநாயக்கா கல்லூரியின் 18 ஆண்டுகள் சேவையாற்றி இருக்கின்றேன். எனினும் நான் பெண்கள் பாடசாலையில் படித்த காரணத்தினால் எனக்கு பெண்களின் உள்ளுணர்வுகளை புரிந்துக் கொண்டு செய்வனே எனது பணியை செய்ய ஒரு ஆற்றலை இறைவன் வழங்குவான் என நினைக்கின்றேன்.

இன்று நாம் ஒவ்வொருவரும் இங்கு கூடியிருப்பது எங்கள் பெண்களின் பெருமையை எடுத்து காட்டுவதற்கே ஆகும். 

எங்களுடைய பெண் குழந்தைகள் தேசிய மட்டத்திலே பல்வேறு நிகழ்ச்சிகளிலே பங்கேற்று தங்க பதக்கங்களை பெற்று அகில இலங்கை தமிழ்தின போட்டியிலே வெற்றிவாயை சூடியிருக்கிறார்கள்.

இலங்கை தமிழ்தின போட்டி 2022 தேசிய மட்டத்திலே 3 தங்க பதக்கங்கள் 1 வெள்ளி பதக்கம் வெற்றி கொண்டு கொழும்பு இராமநாதன் கல்லூரி அகில இலங்கையில் பெருமை சேர்க்கும் ஒரு பாடசாலையாக மிளிர்கின்றது.

பாடசாலைகளின் கலாசாரம் என்பது யாப்புகளிலே எழுதி வைக்கப்பட்டு பேணப்படுவதில்லை. பழைய மாணவர்களால் பாடசாலை சமூகத்தினால் கற்றுக் கொண்டிருக்கின்ற அன்பு மாணவிகளினால் பாதுகாக்கப்பட்டு அடுத்த பரம்பரைக்கு ஒப்படைக்கப்படுகின்ற ஒரு பொக்கிஷமே பாடசாலை கலாசாரம் இன்று இந்த வரவேற்பு நடனம் அதனை பிரதிபலித்தது.   

எனது தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றுகையில்…
நல்லதொரு ஆரம்பத்தை ஏற்படுத்தி தந்திருக்கின்றார்கள். சாதனை செய்த மாணவர்களை முன்னிருத்தி ஏனைய மாணவர்களையும் அவ்வாறான சாதனையாளர்களாக எதிர்காலத்திலே திகழ வேண்டும் என்ற நோக்கத்திலே இந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருக்கின்றார்கள்.

கடந்த காலங்களிலே மாணவர்கள் கூட்டாக இயங்கி தங்களுடைய திறன்களை வளர்த்து கொள்ளமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது அவ்வற்றையெல்லாம் கடந்து சகஜமாக வாழ்க்கைக்கு வந்திருக்கிறோம். 

மறுபடியும் எமது புதிய பயணம் புதிய முறையில் ஆரம்பமாகும் என்பதை இந்த சமூகத்துக்கு தெரிவித்துக் கொள்வதற்காக ஆசிரியர்களும் அவர்களால் வழிநடத்தப்பட்ட மாணவர்களும் இந்த கல்லூரிக்கு மட்டுமல்லாமல் தலைவகருக்கே பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

கணிதம் அழகியல் விளையாட்டு துறைகளிலே இவ்வாறு சோபிப்பது மகிழ்ச்சிக்குரியது. ஒரு விளையாட்ட மைதானம் இல்லாத சூழலிலும் கூட இந்த மாணவிகள் தங்கள் திறமையை வெளிகாட்டுவதென்பது பல பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

இந்த ஆசிரியர் மாணவர் கூட்டிணைவு அதுபோல நல்லதொரு தலைமைத்துவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது தற்சுழிவோடு அவர் தன்னை சொல்லிக் கொண்டார் ஆண் பாடசாலைகளில் உதவி அதிபராக பிரிவு தலைவராக இருந்தாலும் கூட பெண் மாணவிகளுக்கு வழிகாட்டக் கூடிய ஒரு பக்குவம் தன்னிடம் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

ஆகவே அவருடைய அனுபவம் என்பது இந்த கல்லூரிக்கு பெரியதொரு மூலதனம் இருமொழி பேசுகின்ற ஒரு பாடசாலையில் மிக சாமர்த்தியமாக வேலை செய்து பலரின் அபிமானத்தை பெற்றுக் கொண்ட அந்த ஒரு பொக்கிஷம் இந்த பாடசாலைக்கு கிடைத்திருக்கிறது. அதை எவ்வாறு இந்த பாடசாலை தக்க வைத்துக் கொண்டு தன்னுடைய தனிநடை பயணத்தை எவ்வாறு செய்ய போகின்றது என்பதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன். 

தேவையான உதவிகளையும் கல்வி அமைச்சின் சார்பில் செய்து கொடுப்பேன் என்ற உறுதியுரையோடு விடைபெறுகின்றேன் என கல்விக்கான தனது பணி தொடரும் என்பதை உறுதி செய்தார்.

அதிபர் ஆசிரியர் மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தங்கள் பராட்டுக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56