சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நோக்குடன் நாசா நிறுவனம் தயாரித்த பிரமாண்ட ரொக்கெட் இன்று விண்வெளிக்கு ஏவப்பட்டது.
ஆர்டெமிஸ்-1 (Artemis I) எனும் ரொக்கெட்டை ஏவும் முயற்சிகள் 2 தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், 3 ஆவது தடவையாக இன்று இந்த ரொக்கெட் ஏவப்பட்டது.
புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து இந்த ரொக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது.
32 அடி உயரமான ஆர்டெமிஸ்-1 ரொக்கெட் இதுவரை தயாரிக்கப்பட் மிக சக்தி வாய்ந்த ரொக்கெட் ஆகும்,
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இறுதியாக 1972-ம் ஆண்டில் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக சந்திரனுக்கு எவரும் அனுப்பப்வில்லை.
இந்நிலையில், மீண்டும் சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தில் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது.
எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ரொக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இதன் முதற்கட்டமாக ஆர்டெமிஸ்-1 ரொக்கெட் இன்று 16 ஆம் திகதி புதன்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஆர்டெமிஸ்-1 ரொக்கெட்டில் மனிதர்கள் எவரும் பயணிக்கவில்லை. எனினும், ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளள்ளது. இந்த ரொக்கெட் 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.
4.1 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆர்டெமிஸ்-1 ரொக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM