மீண்டும் காஞ்சனா.!

Published By: Robert

30 Nov, 2016 | 11:18 AM
image

மூத்த நடிகை காஞ்சனா முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 1964 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகை காஞ்சனா. அதற்கு பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார். அவர் கடைசியாக நீதியா நியாயமா? என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் முப்பது ஆண்டுகள் வரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. இடையில் அவரைப் பற்றி பல சர்ச்சைக்குரிய  செய்திகள் வெளியாகின. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நடிப்பு என்பது வேண்டாம் என்று அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த மூத்த நடிகையை இளம் தெலுங்கு இயக்குநர் சந்தீப் வங்கா, தன்னுடைய படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தில், பாட்டி வேடத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். கதையை முழுவதும் கேட்ட பிறகு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் காஞ்சனா. விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் படக்குழுவினர். 

நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்த ‘பெள்ளிசூப்லு’ என்ற படம் அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

77 வயதாகும் மூத்த நடிகை காஞ்சனா முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவது குறித்து திரையுலகமே சந்தோஷத்தில் இருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்