ரஸ்ய படையினர் மீது உக்ரைன் படையினர் ஏவிய ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக போலந்து அதிகாரிகள் இந்த ஏவுகணை ரஸ்யாவில் தயாரிக்கப்பட்டது என தெரிவித்திருந்தனர்.
இதேவேளை ரஸ்யா இந்த ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் என தான் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிpவித்துள்ளார்.
இதேவேளை நேட்டோவின் உறுப்பு நாடான போலந்தில் வீழ்த்து வெடித்த ஏவுகணை குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பலநாடுகளிடம் இதேபோன்ற ஆயுதங்கள் உள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் இதன் காரணமாக அந்த ஏவுகணை எதுவென அடையாளம் காண்பதன் மூலம் தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற முடிவிற்கு வரமுடியாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
நாங்;கள் இந்த விடயம் குறித்து மிகவும் அவதானத்துடன் அணுகுவதே அர்த்தபூர்வமானது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை போலந்து எல்லைக்கு மேல் சென்றுகொண்டிருந்த நேட்டோ விமானமொன்று ஏவுகணையை அவதானித்தது என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM