ஒலிக்கலவைப் பொறியாளராக நடித்திருக்கும் சசிகுமார்

By Digital Desk 2

16 Nov, 2022 | 12:56 PM
image

'கிராமத்து நாயகன்' நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் 'நான் மிருகமாய் மாற' எனும் படத்தில் அவர் ஒலிக்கலவை பொறியாளர் வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'கழுகு', 'சவாலே சமாளி', 'சிவப்பு', 'கழுகு 2' ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நான் மிருகமாய் மாற'.

இந்தப் படத்தில் கிராமத்து நாயகனான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் விக்ராந்த், மதுசூதன ராவ், அப்பானி சரத், கே. எஸ். ஜி. வெங்கடேஷ், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. டி. ராஜா மற்றும் டி. ஆர். சஞ்சய் குமார் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எளிய மனிதன் ஒருவன் மிருகமாக மாறினால்.. என்பதை அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதனுக்கு இந்த சமூகம் அளிக்க வேண்டிய பாதுகாப்பு அளிக்காமல், துரோகம் செய்தால், அந்த மனிதன் பாதிக்கப்பட்டு எம்மாதிரியான முடிவுகளை மேற்கொள்கிறான் என்பதை திரைக்கதையாக விவரித்திருக்கிறோம். இதில் நாயகன் சசிகுமார் முதன் முதலாக கிராமிய பின்னணியில் இருந்து மாறுபட்டு நகரவாசியாக நடித்திருக்கிறார். 

அதிலும் இசை தொடர்பான பணிகளில் ஒன்றான ஒலிக் கலவை பொறியாளராக நடித்திருக்கிறார். இதனால் இப்படத்திற்கு பின்னணியிசை புதுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் கடுமையாக உழைத்து இசைக்கருவிகளின் ஒலிகளல்லாமல், இயற்கையில் எழும் ஒலிகளை ஒருங்கிணைத்து பின்னணியிசையாக இணைத்திருக்கிறார். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இதில் நாயகன் சசிகுமார் ஆக்சன் காட்சி ஒன்றில் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி படக்குழுவினரை உற்சாகப்படுத்திப்படுத்தினார்.  

இப்படத்தின் கதாநாயகிக்கு ஆறு வயதில் ஒரு குழந்தை உண்டு. வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான வேடத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்திருக்கிறார். '' என்றார்.

சசிகுமார் நடிப்பில் தயாராகி இருக்கும் 'நான் மிருகமாய் மாற' இம்மாதம் 18 ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று அவர் நடிப்பில் தயாரான "காரி' எனும் திரைப்படமும் வெளியாகிறது. அடுத்தடுத்த வாரங்களில் சசிக்குமாரின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' வாணி...

2023-02-04 16:05:03
news-image

குத்தாட்ட நடிகையான ரித்திகா சிங்

2023-02-04 13:31:25
news-image

தலைக்கூத்தல் - திரை விமர்சனம்

2023-02-03 17:33:34
news-image

இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் மறைவு

2023-02-03 16:37:15
news-image

நடிகர் மகத் ராகவேந்திரா நடிக்கும் 'காதல்...

2023-02-03 13:29:14
news-image

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்...

2023-02-03 13:29:59
news-image

சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின்...

2023-02-03 13:30:40
news-image

பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்...

2023-02-03 13:31:10
news-image

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

2023-02-02 12:46:37
news-image

மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகும் 'கிறிஸ்டி'...

2023-02-02 12:08:57
news-image

'தளபதி 67' படத்தின் தொடக்க விழா...

2023-02-02 11:48:28
news-image

சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் மூன்றாவது...

2023-02-02 11:48:09