திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 15) மாலை 3.30 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலகத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய வரலாற்றுப் பதிப்பான 'திருக்கோணேஸ்வரம்' எனும் தொல்லியல் சான்றுகளை உள்ளடக்கியதான நூலின் அறிமுக விழா நடைபெற்றது.
திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவரும் சட்டத்தரணியுமான துஸ்யந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வரவேற்புரையினை மக்கள் கலையரங்கின், கலை இலக்கிய செயற்பாட்டாளர் வ.தர்மபவன் நிகழ்த்தினார். ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான திருமலை நவம் அவர்கள் நூலின் அறிமுக உரையை வழங்கினார்.
நூல் தொடர்பான கருத்துரைகளை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை மேனாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, வரலாற்றுத்துறை மேனாள் பேராசிரியர் ப.புஸ்பரெட்ணம் ஆகியோர் நிகழ்த்தினர்.
சமகாலத்தின் மீதான தேவை கருதிய இப்படைப்பின் நூலாசிரியரான பேராசிரியர் சி.பத்மநாதன் உரையாற்றுகையில், ஈழத்து சைவ மரபை பொறுத்தவரையில் திருகோணேஸ்வரம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொண்மை கொண்ட, வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்ட திருத்தலம் என்றும் அது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதிலிருந்து பாதுகாக்க வேண்டியது இளைய சமூகத்தினரின் தற்கால தேவை எனவும் தெரிவித்தார்.
மேலும், நிகழ்வில் சட்டத்தரணிகள், மருத்துவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், இந்து ஆலய குருமார்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM