ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட் : பயிற்சியாளராக இணைத்தது மும்பை

Published By: Digital Desk 2

16 Nov, 2022 | 10:34 AM
image

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரான் பொல்லார்ட்  அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி துப்பாட்ட வீரர் கிரான் பொல்லார்ட். இவர் மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த ஆண்டுடன் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து இடம் பிடித்தார். அடுத்த ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

நேற்று மாலை 5 மணிக்கு முன்னர் வீரர்களை வெளியேற்றி, தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை 10 அணிகளும் சமர்பிக்க வேண்டும்.

அந்த வகையில், பொல்லார்டை விடுவிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது. இதனால் அவர் மாற்று அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்தார். அவர் அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது.

இதனால் வீரராக இல்லாமல், பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து கைகோர்க்கிறார் பொல்லார்ட்.

இதுகுறித்து பொல்லார்ட் கூறுகையில்,

''நான் இன்னும் சில வருடங்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் நோக்கம் இருந்த நிலையில், இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடத்திய ஆலோசனையின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுதல் தேவைப்படுகிறது.

ஆகையால் நான் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது தெரியவந்தது. அப்புறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக என்னாலேயே எதிரணியில் விளையாடுவதை பார்க்க முடியாது. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து உணர்வுபூர்வமாக குட்-பை சொல்லி விடைபெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் வீரராகவும் பணியாற்ற ஒப்புக் கொண்டேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16