போலந்தில் ஏவுகணையொன்று வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். யுக்ரைனுக்கு அருகிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், போலந்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் ஜி7 மற்றும் நேட்டோ தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
யுக்ரைன் மீது ரஷ்யா நேற்று சுமார் 100 ஏவுகணைகளை ஏவிய நிலையில், போலந்திலும் ஏவுகணையொன்று வீழ்ந்துள்ளது.
இந்த ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை.
இச்சம்பவத்தையடுத்து போலந்து இராணுவம் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து ஜனாதிபதி அண்ட்ர்ஸெஜ் துடாவுடன் அமெரிக்க ஜனாதிபதி இது குறித்து கலந்துரையாடியதுடன், இது தொடர்பான விசாரணைகளுக்கு போலந்துக்கு உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விரு நாடுகளின் இராணுவத் தளபதிகளும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்கஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த ஏவுகணையை ஏவியது யார் என்பது தெரியாது என போலந்து ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை ரஷ்ய ஏவுகணை போலந்தில் வீழ்ந்ததாக கூறப்படுவதை ரஷ்யா நிராகரித்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை போலந்தில் வீழ்ந்ததாக போலந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், வேண்டுமென்றே ஆத்திரமூட்டல்களை தூண்டுவதாகவும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM