தமிழ் மக்களை புறக்கணிக்கவோ அல்லது கைவிடவோ மாட்டோம் - தவராசா கலையரசனின் கருத்துக்கு விஜேதாச பதில்

Published By: Vishnu

15 Nov, 2022 | 09:15 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் எந்தவொரு வேலைத்திட்டங்களிலும் தமிழ் மக்களை புறக்கணிக்கவோ அல்லது கைவிடவோ மாட்டோம் . வடக்கு மக்களை புறக்கணிக்கவில்லை என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்ப மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (15) செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையசரன் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடமாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அங்கு சென்றிருந்த போது ஆளுநர் தலைமையில் விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளேன். 

அதேபோன்று இது தொடர்பான சட்டங்களை இறுக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இதுபோன்று செயலணிகளை அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். நாங்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கவில்லை.

இதேவேளை எவ்வித அழைப்பு இன்றி கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். அங்கே இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 11 ஆயிரத்து 200 பேர் வரையிலானோர் உள்ளனர். அவர்களில் பலர் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதன்படி அங்கு மூன்று நடமாடும் சேவைகளை நடத்தியுள்ளோம்.

அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவும், அதனை இரட்டிப்பாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களையோ, உங்கள் சமூகத்தையோ நாங்கள் புறக்கணிக்கவோ, கைவிடவோ இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31