(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
ஊழல் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கி,மோசடி செய்யப்பட்ட அரச நிதியை மீண்டும் அரசுடமையாக்குமாறு நாட்டு மக்கள் அழுத்தமாக வலியுறுத்தியுள்ள நிலையில் கடந்த காலத்தை மறந்து செயற்படுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவது எவ்விதத்தில் நியாயமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பை மாத்திரம் இந்த வரவு செலவுத் திட்டம் பிரதான இலக்காக கொண்டுள்ளது.
ஊழல் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கி,மோசடி செய்யப்பட்ட அரச நிதியை மீண்டும் அரசுடமையாக்குவது தொடர்பில் எவ்வித யோசனையும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
ஊழல் ஒழிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை.ஊழல்வாதிகளை தண்டிக்காமல் கடந்த காலத்தை மறந்து செயற்படுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை எந்த எவ்வகையில் நியாயமானதாகும்.
பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ள போதும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களினதும்,இராஜாங்க அமைச்சுக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொள்ள அவதானம் செலுத்துகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அரச தலைவர் குறிப்பிடுகிறார்.
நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக முதலில் அரச தலைவர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது, மக்களாதரவு இல்லாமல் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது,நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக் கொள்ள அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM