சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சர்ச்சைக்குரிய பெண்மணி வேடத்தில் நடித்து, ரசிகர்களின் சிறப்பான கவனத்தை ஈர்க்கும் நடிகை ஆண்ட்ரியா, கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'அனல் மேல் பனித்துளி' எனும் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் நவம்பர் 18 ஆம் திகதியன்று வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் ஆர். கெய்ஸர் ஆனந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அனல் மேல் பனித்துளி'. இதில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் நடிகர் ஆதவ் கண்ணதாசன் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பெண்ணியத்தை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீடு பட மாளிகையில் அல்லாமல் நேரடியாக சோனி லீவ் எனும் டிஜிட்டல் தளத்தில் நவம்பர் 18 ஆம் திகதியன்று வெளியாகிறது.
பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்மணிக்கு இந்த சமூக அமைப்பு எம்மாதிரியான நீதியையும், பாதுகாப்பையும் வழங்குகிறது என்பதும், அப்பெண்மணி நீதிக்காக போராடும் போது இந்த சமூக அமைப்பில் தடைக்கல்லாக இருக்கும் விடயங்களை பற்றியும் விவரித்திருப்பதால் 'அனல் மேல் பனித்துளி' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM