பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் !

By Ponmalar

15 Nov, 2022 | 02:34 PM
image

கேள்வி
எனக்கு வயது 23. நான் ஒருவரைக் காதலித்தேன். ஒருநாள் நான் வேலை முடிந்து வீடு திரும்பும்போது அவர், என் கையைப் பிடித்து இழுத்து கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டார்.

அப்போதிலிருந்து அவர் மீது எனக்கு வெறுப்பு உண்டாயிற்று. அவர் ஒரு காம அடிமை என்பதை அறிந்துகொண்டேன். எனக்கு நடந்ததைவிட விபரீதமாக வேறு எந்தப் பெண்ணுக்கும் நடந்துவிடலாம். இதைத் தடுப்பதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

பதில்
உங்கள் சமூக மயச் சிந்தனை பாராட்டத்தக்கதே என்றாலும், இதில் நீங்கள் பெரிதாக ஒன்றையும் செய்துவிட முடியாது. பொலிஸில் சொன்னால் அது உங்களுக்கே பெரும் பிரச்சினையாக விடியும். எனவே, உங்களுக்கு நடந்த விபத்தை மறந்துவிட்டு உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள். முடிந்தால், அந்த வழியாகப் போய்வரக்கூடிய அல்லது, நீங்கள் குறிப்பிடும் நபர் நடமாடும் இடங்களில் வசிக்கக்கூடிய உங்கள் நண்பிகளிடம் இது பற்றிச் சொல்லி வையுங்கள். அதுவே போதுமானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right