தனுஷ் யார் மகன் என்ற வழக்கு நீதி­மன்­றத்­திற்கு வந்­துள்ள நிலையில் புகைப்­படம் ஒன்று சமூக வலை­த­ளங்­களில் தீயாக பர­வி­யுள்­ளது. 

நடிகர் தனுஷ் இயக்­குனர் கஸ்­தூரி ராஜாவின் மகன் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். 

இந்­நி­லையில்  கதி­ரேசன், மீனாட்சி தம்­பதி தனுஷ் தங்கள் மகன் என கூறி­யுள்­ளனர். மேலும் இது தொடர்­பாக மதுரை மாவட்ட மேலூர் நீதி­மன்­றத்­திலும் வழக்கு தொடர்ந்­துள்­ளனர். 

இந்­நி­லையில் பொய் வழக்­கு­களால் நீதித்­து­றையின் பொன்­னான நேரம் வீணா­வதை நினைத்து கவ­லை­யாக உள்­ள­தாக இயக்­குநர் கஸ்­தூரி ராஜா கூறியிருந்தார்.  மேலும் தனுஷ் 16 வயதில் காணாமல் போன­தாக கதி­ரேசன் தெரி­வித்­துள்ளார். 

இந்­நி­லையில் தனுஷ் சிறு­வ­னாக கஸ்­தூரி ராஜா குடும்­பத்­தோடு இருக்கும் புகைப்­படம் சமூக வலை­த­ளங்­களில் தீயாக பரவி வரு­கி­றது. ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வெளியிட்டு தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகனே என தெரிவித்து வருகிறார்கள்.