சேர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவாக் ஜோகோவிச், அடுத்தவருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவற்காக விசா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாஙகம் தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளின்போது, ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து, அவர் நாடு கடத்தப்பட்டதுடன், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு 3 வருட தடையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
35 வயதான ஜோகோவிச் உலகின் முன்னாள் முதல்நிலை வீரராவார். 21 தடவைகள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். இவற்றில் 9 அவுஸ்திரேலிய சம்பியன் பட்டங்களும் அடங்கும். தற்போது தரவரிசையில் 2 ஆவது இடத்தில் உள்ளார்,
கடந்த வருடம் ஜனவரியில், அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளுக்காக, அப்போதைய நடப்புச் சம்பியனான ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். ஆனால், அவர் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரை பல நாட்கள் தடுத்து வைத்திருந்த நிலையில், அவரின் விசாவையும் ரத்துச் செய்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பின் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
அவுஸ்திரேலிய சட்டப்படி நாடு கடத்தப்பட்டவருக்கு 3 வருடங்கள் விசா வழங்க முடியாது.
எனினும், நோவாக் ஜோகோவிச் மீதான தடையை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் நீக்கவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM