செவிப்புலன் குறைவதாக கூறிய நபரின் காதுக்குள் 5 வருடங்கள் காதுக்குள் சிக்கியிருந்த இயர்பட் 

Published By: Sethu

15 Nov, 2022 | 12:18 PM
image

தனது செவிப்புலன் குறைந்துகொண்டு செல்வதாக எண்ணி நபர் ஒருவரின் காதுக்குள் இயர்பட் ஒன்று 5 வருடங்களாக சிக்கியிருந்தமை தெரியவந்துள்ளது. 

பிரிட்டனைச் சேர்ந்த வெலஸ் லீ என்பவரின் காதுக்குள் 5 வருடங்களாக அடைபட்டுக் கிடந்த இயர் பட்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

66 வயதான வெலஸ் லீ, கடற்படையில் பொறியியலாளராக பணியாற்றியவர். இராணுவ ஹெலிகொப்டர்களுக்கு அருகில், இரைச்சல்களுக்கு மத்தியில் 24 வருடங்களாக பணியாற்றியமையே தனது செவிப்புலன் பாதிக்கப்பட்டமைக்கு காரணம் என அவர் முதலில் எண்ணினார்.

பின்னர் தனது காதுக்குள் ஏதோ இருப்பதை வெலஸ் லீ  அறிந்து கொண்டார். எனினும், அப்பொருள் என்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

மருத்துவரிடம் சென்ற வெலஸ் லீ,   அம்மருத்துவர் காது மூக்கு தொண்டை (ஈஎன்ரி) நிபுணரிடம் அனுப்பி வைத்தார்.

அவர், காதுக்குள் இருந்த பொருளை இழுத்து எடுத்ததாகவும் அதன்பின் உடனடியாக தனது காது மீண்டும் தெளிவாக கேட்க ஆரம்பித்ததாகவும் வெலஸ் கூறியுள்ளார். 

அது ஒரு இயர்பட் என்பதை உணர்ந்த வெலஸ் லீ அதிர்ச்சியடைந்தார், ஏனெில் நீண்டலைமாக அவர் இயர்பட் எதனையும் பயன்படுத்தவில்லை.

கடந்த 5 வருடங்களில் தான் இயர்பட் எதையும் பயன்படுத்தவில்லை எனவும், இறுதியாக, 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்றவேளை, உறக்கத்தின் போது இரைச்சல் ஒலியை தவிர்ப்பதற்காக இதை தான் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right