மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல்

Published By: Ponmalar

15 Nov, 2022 | 12:41 PM
image

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவது வயிற்றுவலியை போல் சாதாரண நிகழ்வுதான்... இது சற்று அசௌகரியமான விடயம்தான் என்றாலும் இந்த பிரச்சினையை தவிர்க்க இயலாது என்கின்றனர் மருத்துவர்கள். 

இதற்கு ஹோர்மோன் பிரச்சினையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்சினை தொடங்கிவிடும்.

அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹோர்மோன் அதிகளவில் சுரக்கத் தொடங்கிவிடும். இந்த ஹோர்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே, இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறனர்.

தீர்வுகள்
மாதவிடாய் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மாதவிடாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்திலும் நார்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். அப்பிள், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கெரட், ப்ரக்கோலி, மக்காசோளம், சியா விதைகள் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.

உணவு மட்டுமன்றி அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். 

எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து குடிப்பதும் மலச்சிக்கலுக்கு நல்லது.

குறிப்பு: 
ஒருவேளை இந்த மலச்சிக்கல் தீவிரமாகவோ, பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கடினமாகவோ இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுதல் நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right