'வைகைப்புயல்' வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 12:42 PM
image

சிறிய இடைவெளிக்கு பிறகு 'வைகைப்புயல்' வடிவேலு  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனும் படத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், 'வைகைப்புயல்' வடிவேலு பாடிய 'அப்பத்தா..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி கொமர்ஷல் இயக்குநரான சுராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.

இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சிவாங்கி கிருஷ்ணகுமார் நடிக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.  பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கொமர்ஷல் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'அப்பத்தா..' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் துரை மற்றும் அசல் கோளாறு ஆகியோர் எழுதியிருக்க, 'வைகைப்புயல்' வடிவேலு தன் சொந்த குரலில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. துள்ளல் இசையுடன் வடிவேலுவின் வசீகரமான குரலும் இணைந்திருப்பதால் இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

'வடிவேலு ரிட்டன்ஸ்' என குறிப்பிடும் வகையில் இந்த பாடலில் அவருடைய அலப்பறை அமைந்திருப்பதாலும், இதற்கு 'நடனப்புயல்' பிரபுதேவா நடனம் அமைத்திருப்பதாலும், இணையவாசிகளிடமும் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'மரகத நாணயம்...

2026-02-17 17:44:36
news-image

றாப் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்...

2026-02-17 17:42:12
news-image

சேயோன்' ஆக நடிக்கும் சிவகார்த்திகேயன்

2026-02-17 17:39:41
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-02-17 17:37:19
news-image

நடிகர்கள் விமல் - நட்டி இணைந்து...

2026-02-17 17:33:56
news-image

ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகும் '...

2026-02-17 17:32:04
news-image

நடிகர் பிரியன் நடித்திருக்கும் 'வெகுளி' படத்தின்...

2026-02-16 18:34:35
news-image

சீதா பயணம் - திரைப்பட விமர்சனம்

2026-02-16 18:32:11
news-image

டெண்ட்கொட்டா டிஜிட்டல் தளத்தின் ட்ரெண்டிங்கில் இடம்...

2026-02-16 18:24:47
news-image

நடிகர் மதும்கேஷ் நடிக்கும் 'காதல் ரீசெட்...

2026-02-16 18:22:18
news-image

நடிகர் சித்து நடிக்கும் 'டார்க் ஹெவன்'...

2026-02-16 18:17:29
news-image

இணையத்தில் முன்னணி பெற்ற பான் இந்திய...

2026-02-16 18:14:43