சீனாவுடன் புதிய பனிப்போரா? சீன ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?

Published By: Rajeeban

15 Nov, 2022 | 11:58 AM
image

சீனாவுடன் புதிய பனிப்போரிற்கான தேவையுள்ளதாக என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா தாய்வான்மீது போர் தொடுக்கும் என கருதவில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருவரும் வடகொரியா குறித்தும், உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

உக்ரைனில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுவதை  எதிர்ப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

சமாதானத்திற்கான சீனாவின் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தியுள்ள சீன ஜனாதிபதி குழப்பமான பிரச்சினைக்கு இலகுவான தீர்வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவால் வடகொரியாவை கட்டுப்படுத்த முடியும் என நான் உறுதியாக கருதுகின்றேன் என தெரிவிப்பது கடினம் என அமெரிக்க ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டில்  குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வடகொரியா மற்றுமொரு அணுவாயுத பரிசோதனையில் ஈடுபடுவதை தடுக்கவேண்டிய கடப்பாடு சீனாவிற்குள்ளது என சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.

ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தாய்வான் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்வானிற்கு சென்றதை தொடர்ந்து பதற்ற நிலை அதிகரித்து காணப்பட்டது.

சீனா உடனடியாக பாரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டதை தொடர்ந்து  அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் குறித்த அச்சம் ஏற்பட்டது.

தாய்வான் தொடர்ந்தும் சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாக காணப்படுகின்றது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடக்க முடியாத முதல் சிகப்பு கோடு அது என சீன ஜனாதிபதி  அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

தாய்வான் மீது சீனா தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என சமீப காலங்களில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது உண்மையா புதிய பனிப்போர் உருவாகின்றதா என   செய்தியாளர்கள் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள அவர்  புதிய பனிப்போரிற்கான தேவையுள்ளதாக நான் உறுதியாக நம்பவில்லை,தாய்வான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் உடனடி நோக்கம் எதுவும் சீனாவிடம் உள்ளதாக நான் கருதவில்லை எனகுறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17