சகுனங்கள், சமிக்ஞைகள் இரண்டும் ஒன்றா..? வேறு வேறா..?

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 12:57 PM
image

(சுபயோகதாசன்)

எம்மில் பலரும் சகுனங்களையும், சமிக்ஞைகளையும் ஒன்று என கருதி குழப்பிக் கொள்கிறோம். இவை இரண்டும் ஒன்றல்ல நுட்பமான வேறுபாட்டினை கொண்டிருப்பவை.

சகுனங்களையும், சமிக்ஞைகளையும் வேறுபடுத்தி பார்க்கலாம். இவை இரண்டின் நோக்கமும் ஒன்றுதான் என்றாலும், இடமும், பொருளும், சொல்லும் விடயங்களும் வேறு என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதற்கு முன் இன்றைய திகதியில் இளைய தலைமுறையினரும், இணைய தலைமுறையினரும் இந்த சகுனங்கள் குறித்து எதிர் நிலையான கருத்தியலையே அதிகமாக கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் 'சகுனம் என்பது மூடநம்பிக்கை' என்ற கோட்பாட்டினை உறுதியாக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள். ஆனால் இவர்களில் பலரும் தாங்கள் ஏதேனும் ஒரு காரியத்தை செய்ய விரும்பினாலோ அல்லது அதனை செய்தாலோ.., அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு எவரும் எதிர் நிலையான கருத்தையோ ,அதனை மறுதலிகாகவோ கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். இது இன்றைய இளைய தலைமுறையினரின் மனப்போக்காக இருக்கிறது.

இந்நிலையில் இவர்கள்தான் சகுனத்தைப் பற்றிய முழுமையான புரிதலை உள்வாங்கி கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த ஒரு காரியத்தையும், எந்த தருணத்தில் நிகழ்த்த வேண்டும் என்பதனை உணர்த்தும் ஒரு சூட்சும குறியீடு தான் சகுனங்கள்.

இதனை இன்றைய ஆன்மீக அறிஞர்கள், 'சகுனங்களை காட்சி வடிவிலான அசரீரி' என விளக்கமளிக்கிறார்கள். இதன் காரணமாகவே சகுனம் என்றால் என்ன? என்பதனை அறிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்ட தொடங்கியிருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு செயலை செய்யத் தொடங்குவதற்கு, இந்த சமூகம் மற்றும் சமுதாயத்தின் ஆதரவை பெறுவதற்காக பயணத்தை மேற்கொள்ளும் போது, அதன் தொடக்க நிலையில் வெற்றி கிடைக்குமா? அல்லது இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பயணிக்கலாமா? என்பதை உணர்த்துவது தான் சகுனம் அல்லது சகுனங்கள் என பொருள் கொள்ளலாம்.

சகுனம் என்றதும் அவை 'சுப சகுனம்' என்றொரு பட்டியலும், 'அசுப சகுனம்' என்றொரு பட்டியலும் நீளும். இன்றைய தலைமுறையினர் சுப சகுனத்தின் பட்டியலை மட்டுமே விரும்புகிறார்கள். ஏனெனில் சுப சகுனம் அல்லாத வேறு அனைத்தும் அசுபம் என்று பொருள் கொள்கிறார்கள்.

தும்மல், கால் இடறல், நாய் குரைப்பு, பூனை பயணம், வளையல் சத்தம், பசு மாடு எதிரில் வருவது, யானை வருவது, கன்னிப்பெண்கள் தண்ணீர் குடம் எடுத்து வருவது, விறகு எடுத்து வருவது, சுமங்கலி பெண் வருவது, பால் எடுத்து வருவது, கலசம் எடுத்து வருவது, கீரை கட்டு எடுத்து வருவது, பல்லி ஒலி எழுப்புவது என பல விடயங்கள் சகுனங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

சுப சகுனங்களை பார்த்து விட்டோ அல்லது கேட்டுவிட்டோ.. சென்றவர்களின் நோக்கமும், பயணமும் முழுமையான வெற்றியை பெற்றது என்பதனை பலரும் பகிரங்கமாக ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் நோக்கம் வெற்றியை நோக்கிய பாதையில் பயணிக்கிறது என்பதை மட்டும் உறுதியாக தெரிந்து கொள்ளலாம்.

சமிக்ஞைகள் என்பது பயணத்தின் போது அல்லது ஒரு காரியத்தினை தொடங்கும் போது..., கையில் உள்ள பொருட்கள் தவறி கீழே விழுவது.. கீழே விழுந்து உடைவது.. என சிலவற்றையே குறிப்பிடலாம். மேலும் சமிக்ஞைகள் என்பது ஒவ்வொருவருடைய உள்ளுணர்வுடன் அடர்த்தியான தொடர்பினை கொண்டது. சில ஆன்மீகவாதிகளிடம், ''இவ்விடயத்தை தொடங்கலாமா?'' என பணிவுடன் கேட்டால், அவர்கள் சிறிது நேரம் தியானித்து விட்டு, உடனடியாக தொடங்க வேண்டாம் அல்லது சிறிது நேரம் கழித்து தொடங்கலாம். அல்லது வேறு தருணங்களில் தொடங்கலாம் என அறிவுறுத்துவர்.

இதன் காரணமாக சமிக்ஞைகள் என்பது மிக நுட்பமான உள்ளுணர்வுடன் தொடர்புடையது. இதனால் தான் ஆன்மீக பெரியோர்கள் நல்லொழுக்கம், இறை நம்பிக்கை, தூய நடத்தை போன்ற விடயங்களை வாழ்வியல் முறைகளாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு உள்ளுணர்வை உணர்தல் என்பது மேலதிகமாக இருக்கும். இவர்களின் பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்'' என குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்களை நேர் நிலையான சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே எளிதாக அடையாளம் காண முடியும். வணிக நோக்கத்துடன் அல்லது பேராசையுடன் கூடிய வல்லாதிக்க நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு, இவர்களின் அருகாமை கிட்டாது என்றும் ஆன்மீக பெரியோர்கள் முன்மொழிகிறார்கள்.

சகுனங்கள், சமிகாஞைகள் இரண்டும் வெவ்வேறானது என்பதனை உணர்ந்திருப்பீர்கள். சகுனங்கள் ஒருவரின் செயல் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான உந்துதலை மனதளவில் ஏற்படுத்தக்கூடிய சாதகமான அம்சம் என்பதனை மட்டும் நாம் மனதில் கொள்ள வேண்டும். சகுனங்களை தொடர்ச்சியாக பின்பற்றத் தொடங்கினால், உள்ளுணர்வை உணர்ந்திருக்கும் ஆன்மீக பெரியோர்களின் தரிசனமும், வழிகாட்டலும் கிடைக்கும். அதனையடுத்து வாழ்வில் வெற்றியையும், நிறைவையும் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய...

2024-02-27 15:20:20
news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51