நெல்லியின் மருத்துவ குணங்கள்

Published By: Ponmalar

15 Nov, 2022 | 11:34 AM
image

நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். 

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். 

ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் விட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது  சாப்பிடலாம். 

நெல்லிக்காயில் கல்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவைக்கும். இரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும்  பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக  உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

2023-03-22 17:08:33
news-image

வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

2023-03-21 15:44:01
news-image

புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

2023-03-20 15:53:24
news-image

யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-18 16:51:18
news-image

பச்சையாக சாப்பிடாதீர்கள்!

2023-03-18 12:46:01
news-image

ஸ்போண்டிலோஒர்த்ரைடீஸ் எனும் முதுகுத்தண்டு வீக்க பாதிப்பிற்குரிய...

2023-03-18 12:21:25
news-image

கான்ஜுன்க்டிவிடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-16 15:32:11
news-image

இன்சுலினை ஆயுள் முழுதும் பயன்படுத்த வேண்டுமா...?

2023-03-15 14:52:57
news-image

ஹெமடெமிஸிஸ் எனும் ரத்த வாந்தி பாதிப்பிற்குரிய...

2023-03-14 12:49:12
news-image

பக்கவாத பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க உதவும் புனர்வாழ்வு...

2023-03-13 17:09:23
news-image

ஹீமோப்டிசிஸ் எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-03-11 13:10:36
news-image

மெனிஸ்கல் எக்ஸ்ட்ரூஸன் எனும் பாதிப்பிற்குரிய சத்திர...

2023-03-09 13:34:10