இளமையை பராமரிக்க உதவும் யோகா !

Published By: Ponmalar

15 Nov, 2022 | 11:12 AM
image

முதுமை அடைவது என்பது இயல்பான போக்கு என்றாலும் முதுமைக்கான அறிகுறிகளை ஒத்திப் போடுவதில் யோகப் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. 

  • ஒருவரின் முதுகெலும்பு எவ்வளவுக்கெவ்வளவு நலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவரின் உடல் நலம் மேம்பட்டதாக இருக்கும். ஒருவரின் முதுகுத்தண்டு எந்த அளவு நெகிழ்வுத் தன்மையோடு இருக்கிறதோ அந்த அளவுக்கு வயதாவதால் ஏற்படும் உடல் இறுக்கம் தவிர்க்கப்படுகிறது. யோகா பயில்வதால் முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மை பாதுகாக்கப்படுகிறது.

  • தொடர்ந்து ஆசனம் பழகுவதால் உடல் உள்ளுறுப்புகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக வயது கூடும்போது மலச்சிக்கல் மற்றும் செரியாமை ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆசனங்கள் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துவதால் இப்பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டு செரிமான மண்டலம் செம்மையாக இயங்குகிறது.

  • வயதாகும்போது ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று உடல் சமநிலையில் (டியடயnஉந) மாற்றம் ஏற்படுவது. யோகாசனம் உடல் சம நிலையை மேம்படுத்துவதன் மூலம் முதுமையினால் சமநிலை இழத்தல் தவிர்க்கப்படுகிறது.

  • யோகாசனம் பயில்வதால் மூட்டுகள் பலமாக இருப்பதோடு மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.

  • தொடர்ந்து யோகப்பயிற்சி செய்யும்போது நினைவாற்றல் பெருகுகிறது. வயது கூடும்போது நினைவாற்றல் குறைதல் என்பது பொதுவாகக் காணக் கூடியது. ஆனால், ஆசனங்கள் பயில்வதன் மூலம் அந்நிலையைத் தவிர்க்கலாம்.

  • மனச்சோர்வு என்பது இக்காலத்தில் இளையவர்களிடமும் காணப்பட்டாலும், வயதில் முதியவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. யோகா பயில்வதால் மனம் அமைதி பெறுகிறது; மனச் சோர்வு அகலுகிறது. அனைத்துக்கும் மேலாக எந்த அளவுக்கு நாம் யோகா போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோமோ அந்த அளவுக்கு நம் மனம் இளமையாக இருக்கும். இளமையான மனம் உடலை இளமையாக வைக்க உதவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூட்டு வலியை நீக்கும் நவீன சிகிச்சை

2026-02-13 15:53:59
news-image

இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பொலிசித்தீமியா..!?

2026-02-12 14:42:46
news-image

ஒவ்வாமையினால் ஏற்படும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-02-11 17:03:30
news-image

கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-02-10 15:00:08
news-image

ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய...

2026-02-09 18:19:16
news-image

சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும்...

2026-02-07 15:10:23
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-02-06 17:07:16
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

2026-02-05 15:27:13
news-image

கோசிடினியா எனும் வால் எலும்பு வலி...

2026-02-04 15:21:40
news-image

குருதி உறைவு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-02-04 04:08:54
news-image

பிளசன்டா ப்ரிவியா எனும் நஞ்சுக்கொடி பாதிப்பிற்குரிய...

2026-02-02 16:08:16
news-image

நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பிற்குரிய...

2026-01-31 16:16:40