நடிகர் சந்தானம் நடிக்கும் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 11:20 AM
image

கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்து வரும் நட்சத்திர நகைச்சுவை நடிகரான சந்தானம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'வஞ்சகர் உலகம்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்'.

இதில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சுமன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் புகழ், முனிஸ்காந்த் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சென்டிமென்ட் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லேப்ரீந்த் பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

தெலுங்கில் ‘ஏஜென்ட் சாய்’ என்ற பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், இயக்குநர் மனோஜ் பீதா, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சிற்சில மாற்றங்களையும், கூடுதல் திரைக்கதையும் அமைத்து இப்படத்தை இயக்கியிருப்பதாக பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போதைய படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் தன் தாயை இழந்த கதையின் நாயகனான சந்தானம், தனியாக புலனாய்வு செய்து கொலையாளி யார் ? என்று கண்டுபிடிக்கிறார். இது சுவாரசியமாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறன் - விமல் - போஸ்...

2024-06-20 17:03:37
news-image

மலையாள ரசிகர்களையும் கவர்ந்த 'மகாராஜா'

2024-06-20 16:44:29
news-image

நடிகர் நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்'...

2024-06-20 16:35:10
news-image

பிரபுதேவா நடிக்கும் 'மூன் வாக்' பட...

2024-06-19 20:12:40
news-image

அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து

2024-06-19 20:18:52
news-image

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின்...

2024-06-18 17:16:20
news-image

நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சியில் கலக்கும்...

2024-06-18 17:21:15
news-image

சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித்...

2024-06-18 17:22:48
news-image

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது 'புஷ்பா...

2024-06-18 15:04:32
news-image

புதுமுக நடிகர் விஷ்வந்த் நடிக்கும் 'ராக்கெட்...

2024-06-18 14:46:04
news-image

ஜீ - 5 தளத்தில் வெளியாகி...

2024-06-17 17:30:35
news-image

'பீனிக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகும் நட்சத்திர...

2024-06-17 16:43:04