இந்த ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை அளித்து, நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகும் புதிய படமான 'ஜப்பான்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
எழுத்தாளரும், இடது சாரி சிந்தனையாளரும், திரைப்பட இயக்குநருமான ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஜப்பான்'.
இதில் பொக்ஸ் ஓபீஸ் சுப்பர் ஸ்டார் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடிக்கிறார்.
இவர்களுடன் தெலுங்கின் முன்னணி நகைச்சுவை நடிகர் சுனில், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'ஜப்பான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கார்த்தி கையில் மது போத்தலுடன் இருக்கை ஒன்றில் ஏடாகூடமாக அமர்ந்து உறங்குவது போன்றும், அவருக்கு மேலே இருக்கும் புகைப்படத்தில் ஒரு கையில் பூமியையும், மற்றொரு கையில் ஆயுதத்தையும் ஏந்தி அனாயசமாக தோன்றுவதால் ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM