(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால் இதுதொடர்பில் எனது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு தெரிவித்தேன் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் மிகவும் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக உலக வங்கியும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அடையாளம் கண்டுள்ள பிரிவுதான் பெருந்தோட்ட மக்களாகும். ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு எவ்விதமான நல்வாழ்வுத் திட்டத்தையும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டம் தவறிவிட்டது. இது தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் எதிர்ப்பு வெளியிட்டு சுட்டிக்காட்டினேன்.
அதனால் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பாக நாங்கள் டிசம்பர் 8ஆம் திகதி முடிவெடுப்போம். இது தொடர்பாக எமது தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM