அபிவிருத்திக்கான வரவு - செலவுத் திட்டம் - நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

Published By: Vishnu

14 Nov, 2022 | 05:58 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

அபிவிருத்திக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. நாடு விழுந்துள்ள நிலையில் இருந்து விரைவாக எழுவதை நோக்கமாக கொண்டு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (14) திங்கட்கிழமை ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலப்பகுதியில் நாடு என்றுமில்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது சவால் மிக்கதாக காணப்பட்டாலும், அதனை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அபிவிருத்தியை இலக்காக கொண்டு சமர்ப்பிக்கப்படவில்லை.மாறாக பொருளாதார ரீதியில் விழுந்த இடத்தில் இருந்து விரைவாக எழுவதை நோக்கமாக கொண்டுள்ளது, என்பதை தெளிவாக விளங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச வருமானத்தையும்,நேரடி வரிகளையும் அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள வெளிநாட்டு கையிருப்பு பிரச்சனைக்கு நிலையான தீர்வு பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

பாரம்பரியமான வரவ செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்டதாகவும்,யதார்த்த நிலையை அடிப்படையாக கொண்டதாகவும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.நெருக்கடியான பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18