வெளிநாடுகளில் வாழும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய சூட்சம பரிகாரங்கள்

By Digital Desk 2

14 Nov, 2022 | 05:38 PM
image

(சுபயோகதாசன்)

இன்றைய சூழலில் எம்முடைய மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்பவர்கள் அதிகம். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்சினைகளும் அலாதியானது.

இதன் காரணமாக அவர்கள் நாளாந்தம் புகழ்பெற்ற சோதிடர்களை இணையதளம் மூலமாகத் தொடர்புக் கொண்டு தங்களின் எதிர்காலம் குறித்தும், வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

இதன் போது சோதிடர்கள் முன்னிறுத்தும் பரிகாரங்களை எம்மவர்களால் முழுமையாக நிறைவேற்ற முடிவதில்லை. ஆலயங்களுக்கு செல்வது..

ஆலயங்களில் மேற்கொள்ளும் பரிகாரம் ஆகியவற்றை ஜோதிடர்கள் பரிந்துரைக்கும் போது, இவை இரண்டும் புனித யாத்திரை மற்றும் அவர்கள் வசிக்கும் இடங்களில் அருகில் இருக்கும் ஆலயத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.

இதில் பல அசௌகரியங்களும், மனநிறைவின்மையும் நடைமுறையில் இருக்கிறது. இதனை உணர்ந்து வெளிநாடுகளில் வாழும் நம் மக்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், பிரச்சனைகளிருந்து விடுபடுவதற்கும் சில சூட்சம பரிகாரங்களை ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இதனை மேற்கொண்டு பலனை பெற்றவர்கள் அதிகம் என்பதால், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சூட்சம பரிகாரத்தைப் பகிர்கிறோம்.

இந்த பரிகாரம் எளிதானது. அனைவராலும் மேற்கொள்ளக்கூடியது. முதலில் வெள்ளைத் தாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முழு முதற் கடவுளான யானை முகத்தோனை வணங்கி, அவரது மந்திரங்களில் உங்களுக்குப் பிடித்த ஒற்றை மந்திரத்தை, 21 முறை எழுதுங்கள்.

உதாரணத்திற்கு 'ஓம் கணேசனே போற்றி', 'ஓம் யானை முகத்தோனே போற்றி', 'ஓம் அருகம்புல் நாயகனே போற்றி' என தமிழில் எழுதலாம் அல்லது உங்களுக்கு சமஸ்கிருத மொழியில் தெரியும் என்றால் அதனையும் எழுதலாம். ஆனால் 21 முறை எழுத வேண்டும். விநாயகப் பெருமான் கேதுவின் அம்சம் என்பதனால், இதனை செவ்வாய் கிழமைகளில்.., செவ்வாய் ஓரையில் தொடங்குவது முழுமையான பலனை தரும் அல்லது செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் வரும் தினத்தன்று சுப ஓரைகளில் எழுதுவதும் முழுமையான பலனை அளிக்கும்.

மேலும் ஜோதிடர்கள் உங்களுடைய பிரச்சனைகளுக்கு இந்த கிரகம் வலிமை பெற வேண்டும் என குறிப்பிட்டிருப்பர். இதற்கான நவக்கிரக சூட்சம பரிகாரங்களைத் தொடர்ந்து காண்போம்.

சந்திர பகவான் உங்களது ஜாதகத்தில் தேய்பிறையில் இருந்தாலும் அல்லது வளர்பிறையாக இருந்தாலும் அவரின் பரிபூரணமான அருளை பெற, திங்கட்கிழமைகளில் சந்திர ஓரைகளில் சந்திர பகவானை பற்றிய ஒற்றை மந்திரத்தை 10 முறை எழுத வேண்டும். அதன் பிறகு அதனை அடியொற்றி பத்து வரிகள் அதையே மீண்டும் மீண்டும் எழுத வேண்டும்.

அதேபோல் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் செவ்வாய் பகவானுக்குரிய ஒற்றை மந்திரத்தை ஏழு முறை எழுத வேண்டும். அதனை அடியொற்றி ஏழு வரிகள் அதையே மீண்டும் மீண்டும் எழுத வேண்டும்.

புத பகவானின் பரிபூரண அருளைப் பெற, புதன் கிழமைகளில் புதன் ஓரைகளில் அவரது ஒற்றை மந்திரத்தை 18 முறை எழுத வேண்டும். அதனை தொடர்ந்து 18 வரிகள் அதே மந்திரத்தை மீண்டும் மீண்டும் எழுத வேண்டும்.

குரு பகவானின் குருவருளைப் பெற அவரது ஒற்றை மந்திரத்தை 16 முறை எழுத வேண்டும். வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் குருவின் மந்திரத்தை அடியொற்றி 16 வரிகள் எழுத வேண்டும்.

சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டுமானால், வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் அவரது வலிமை மிக்க ஒற்றை மந்திரத்தை 20 முறை எழுத வேண்டும். அதனை அடியொற்றி 20 வரிகள் தொடர்ந்து மீண்டு மீண்டும் அதே மந்திரத்தை எழுத வேண்டும்.

செய்த பாவங்கள் நீங்கவும், கடந்த ஜென்மத்தில் செய்த நன்மைகள் இந்த ஜென்மத்தில் பலனாக கிடைக்க வேண்டும் என்றால், நீதிமானாக திகழும் சனி பகவானின் ஒற்றை மந்திரத்தை சனிக்கிழமைகளில், சனி ஓரையில் 19 முறை எழுத வேண்டும். அதனை தொடர்ந்து அதனை அடியொற்றி 19 வரிகள் அதே மந்திரத்தை மீண்டும் மீண்டும் எழுத வேண்டும்.

நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களின் நற்பலனை பெற, முதலில் ராகுவின் ஒற்றை மந்திரத்தை அதன் ஆதிக்கம் மிக்க சனிக்கிழமைகளில் 18 முறை எழுத வேண்டும். அதனை அடியொற்றி 18 வரிகள் மீண்டும் அதே மந்திரத்தை எழுதி வர வேண்டும். கேது பகவான் அருளைப் பெற செவ்வாய்க்கிழமைகளில் கேதுவின் வலிமைமிக்க ஒற்றை மந்திரத்தை ஏழு முறை எழுத வேண்டும். அதனை அடியொற்றி ஏழு வரிகள் அதே மந்திரத்தை மீண்டும் மீண்டும் எழுதி வர வேண்டும்.

உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமை பெற வேண்டும் என்பதனை ஜோதிடரிடம் ஆலோசித்து அவர் முன்னிறுத்தும் கிரகங்களின் ஒற்றை மந்திரத்தை அதற்குரிய எண்ணிக்கைகளில் எழுதி சூட்சம பரிகாரத்தை சமர்ப்பித்து நவகிரகங்களின் பரிபூரண அருளை பெற்று நலமுடன் வாழலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜாதக கட்டங்களில் உள்ள வெற்றிக்கான சூட்சும...

2022-12-09 17:08:34
news-image

சனி மைந்தன் மாந்தியின் அருளை பெறுவதற்கான...

2022-12-05 13:10:18
news-image

டிசம்பர் மாத ராசி பலன்கள் 01.12.2022...

2022-12-01 15:42:27
news-image

கனவுகள் காண்பதும் கர்மாவா...?

2022-11-25 11:00:22
news-image

ஆயுளை நீட்டிக்கும் எமகண்டம்..!

2022-11-23 13:04:37
news-image

முதலீடு செய்யக்கூடாத ராசி, லக்னம்

2022-11-22 13:54:10
news-image

சகுனங்கள், சமிக்ஞைகள் இரண்டும் ஒன்றா..? வேறு...

2022-11-15 12:57:53
news-image

வெளிநாடுகளில் வாழும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய...

2022-11-14 17:38:58
news-image

ஞாயிறு இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது...

2020-06-17 21:19:11
news-image

கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

2018-08-30 15:41:55
news-image

"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு...

2018-05-09 10:25:54
news-image

"நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப்பொருளை...

2018-05-05 10:32:40