பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, சாரதி அனுமதிப்பத்திரத்தை கிழித்த சீன நபர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது!

Published By: Digital Desk 5

14 Nov, 2022 | 03:34 PM
image

வீதிப் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தச் சென்ற போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து,  தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை  கிழித்த சீன நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இலங்கையில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் (40) வயதுடைய சீனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (13) கொள்ளுப்பிட்டியை அண்மித்த பகுதியில் சந்தேக நபர் வீதிப்போக்குவரத்துச் சட்டத்தை மீறி வாகனம் செலுத்தியதை கொழும்பு போக்குவரத்து கட்டுப்பாட்டு  பாதுகாப்பு கெமரா கட்டுப்பாட்டு பிரிவினர் அவதானித்ததையடுத்து கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கொள்ளுப்பிட்டி பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரை துரத்திச் சென்று, அவரது வாகனத்தை நிறுத்தி, சட்டத்தை அமுல்படுத்தச்  செல்லும்போது, பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்ததால்  அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.  

சந்தேக நபர் கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05