(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அத்துடன் பயிற்றப்பட்டவர்களை வெளிநாட்டு தொழிலுக்கும் அனுப்பும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின்போது தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பங்களிப்பு முறையிலான இந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 2வருடங்களுக்கு 50ஆயிரம் ரூபா பங்களிப்பாக பெற்றுக்கொள்ளப்படும் என்றார்.