தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கணக்குகளை ஒப்படைக்கா விட்டால் நடிகர் சரத்குமார் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தாக நடிகர் சங்கம் தெரி வித்துள்ளது.

சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள தாவது, சரத்குமார் தலைமையிலான நிர்வாகக் குழு 2013/14, 2014/-15 -ஆம் ஆண்டுகளுக்கான கணக்குகளை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியுள்ளோம். இதற்கான பதில் எதுவும் வரவில்லை என் றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் அளித்த நன்கொடை மூலம் இதுவரை ஒரு கோடியே 3 இலட்சம் ரூபா சேர்ந்துள்ளது. அது விரைவில் முதலமைச்சரிடம் கையளிக்கப் படும்.

நடிகர் சிம்புவின் "பீப் சாங்' எனப்படும் பாடல் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இவ் விவகாரத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால் அவர் பிரச்சினையை சட்டரீதியாக சந்தித்துக் கொள்வதாக அறிவித்துள்ளதால், அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியவில்லை.

இந்த விவகாரத்தில் நடிகை ராதிகா, சிம்புவை நாம் கைவிட்டு விட்டதாகவும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டதாக கூறிய கருத் துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இதுகுறித்து அவருக்கு விளக்க மளிக்க அழைப்பாணை அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றனர்.