கட்டுநாயக்க விமான நிலையத்தில் 82 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன், பாகிஸ்தானுக்கு பயணிக்கயிருந்த இருவரை சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தான் பிரஜைகளென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை விமானசேவைக்கு சொந்தமான  யூ.எல். 183 விமானத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தினை கொண்டு செல்ல முற்பட்ட போதே குறித்த நபர்கள் கைதசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாகிஸ்தான் பிரஜைகளிடமிருந்து 54, 500 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.