பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கின்றார் அவுஸ்திரேலிய பிரதமர்

By Rajeeban

14 Nov, 2022 | 03:52 PM
image

நாளை இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றோம் பேச்சுவார்த்தைகளிற்கான முன்நிபந்தனைகள் எதுவுமில்லை,ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்துள்ளேன்  என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்புமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாக அமையலாம்

இதேவேளைதனது நாடு அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராக உள்ளது என சீனாவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஊடகங்களிற்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் பிரதமர் லீ தனது நாடு சந்தர்ப்பத்தை பயன்படுத்த விரும்புகின்றது அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சீனா அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராக உள்ளது, சீன அவுஸ்திரேலிய இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 50 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகள் மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இரு நாட்டு உறவுகளை பேண்தகுதன்மை கொண்டதாக மாற்றவிரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீன அவுஸ்திரேலிய தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு தற்போது காணப்படும் வர்த்தக தடைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவும் என அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான கதிரியக்க பொருளுடன் கப்ஸ்யுல்...

2023-01-28 13:20:36
news-image

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா,...

2023-01-28 12:32:23
news-image

இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான்...

2023-01-28 11:10:38
news-image

வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக...

2023-01-28 10:02:07
news-image

ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் -...

2023-01-28 05:06:32
news-image

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி...

2023-01-27 16:35:43
news-image

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில்...

2023-01-27 15:30:03
news-image

பரீட்சை முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல...

2023-01-27 15:07:56
news-image

பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின்,...

2023-01-27 13:27:35
news-image

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில்...

2023-01-27 13:11:09
news-image

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி...

2023-01-27 12:15:12
news-image

இந்திய மக்கள் மனநிலை குறித்த கருத்துக்...

2023-01-27 12:20:05