பொத்துவிலில் பொது விளையாட்டு மைதானம் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

14 Nov, 2022 | 12:51 PM
image

(எம்.ஐ.எம்.றியாஸ்)

பொத்துவில் சுயாதீன இளைஞர் அமைப்பினர் பொத்துவில் பிரதேசத்திற்கென்று பொது விளையாட்டு மைதானம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கொட்டும் மழைக்கு மத்தியில் இளைஞர்கள் ஆவேசத்துடன் இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மைதானத்திற்காக ஒன்றிணைவோம், அரசியல் பேதமில்லை, வேறுபாடு என்று மில்லை, ஓரணியில் நிற்போம், பேரணியாய் செல்வோம், இனவாதம் வேண்டாம், இளைஞ்சர்களுக்கு மைதானத்தை பெற்றுத்தா எனும் தொனிப் பொருளில் இப்பேரணி பொத்துவில் புட் சிட்டி அருகாமையில் ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக  பொத்துவில் பிரதேச செயலகம் வரையும் கோசங்களை எழுப்பியவாறு சென்றனர். போக்குவரத்திற்கு எந்த விதமான இடைஞ்சலும் ஏற்படவில்லை.

பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாசை பிரதான நுழைவாயிலுக்கு பேரணியினர் வரவழைத்து தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை பகிரங்கமாக வாசித்து அவரிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார்  பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

இதன் போது பொத்துவில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

இது விடயமாக உங்களது கோரிக்கையினை அம்பாறை மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்துகின்றேன். இது விடயமாக ஏற்கனவேயும் தெரியப் படுத்தியுள்ளேன். இதன் போது உங்களது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு நீங்கள் கூறும் இடம் அரச காரணியாக இருக்கும் பட்சத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எனு அவர் இதன் போது தெரிவித்தார்.

இந்த மகஜரில் 30 விளையாட்டு கழகத்தினரும், 20 பாடசாலைகளும் ஒப்பமிட்டுள்ளனர்.இப் பேரணியில் சுமார் 500 மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13