முன்னாள் பிரதியமைச்சா் பீ.பீ. தேவராஜ் எழுதிய ‘இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்’ நுால் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை 13ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள இந்திய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திகள் கிளையின் பணிப்பாளர் எஸ். முரளிதரன், கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழக சட்டக்கல்விப்பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான யசோதரா கதிர்காமர் தம்பி மற்றும் கொழும்பில் வாழும் மலையக வர்த்தக சமூகத்தினா், மலையக புத்திஜீவிகள் உட்பட 100 என மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோ கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டின் ஆரம்ப நிகழ்வாக வரவேற்புரையை அடுத்து கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திகள் கிளையின் பணிப்பாளர் எஸ். முரளிதரன் உரையாற்றினார்.
அவரது உரையில்…
கல்வி இன்றி வேறெதுவும் இல்லை
இன்று தோட்ட அமைப்புகளில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்களாக தங்களை சமூகத்தில் உயர்த்திக் கொண்டுள்ளனர்.
நாம் இன்று கலை பிரிவில் உயர்ச்சியடைந்துள்ள அளவில் விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவுகளின் உயர்ச்சி அடையும் வீதம் குறைவாகவே உள்ளது.
மலையகத்தை பொருத்தவரையில் நுவரெலியா மாவட்டத்தினை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் விஞ்ஞானம் மற்றும் கணித துறையில் மாணவர்களை உருவாக்கும் வல்லமை குறைவாகவே உள்ளது.
எமக்கும் விஞ்ஞானம், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இது தவிர மக்களின் வாழ்க்கை அமைப்பு கூட அவர்களுக்கு எதிராகவே காணப்படுகின்றது.
எம்மவர்களுக்கு கல்வி இன்றி வேறெதுவும் இல்லை எனவே மாணவர்களின் கல்விக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்த அவர்…
பீ.பீ. தேவராஜ் எழுதிய ‘இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்’ நுால் பற்றி கூறும்போது…
மலையகத்தில் வாழும் மாணவர்கள் தங்கள் வரலாற்றினை தெரிந்துக் கொள்ள இந்நூலை கட்டாயம் படிக்க வேண்டும். இந்நூல் மாணவர்களை சென்றடைய அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்கிறேன் என தெரிவித்தார்.
நிகழ்வில் நூலுக்கான ஆய்வுரையினை கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழக சட்டக்கல்விப்பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான யசோதரா கதிர்காமர் தம்பி வழங்கியிருந்தார்.
நூலுக்கான ஆய்வுரையில்…
நிலத்தொடர்பற்ற சமூகம்
‘இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்’ நுாலினை நூலின் ஆசிரியர் 2015ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்தார். அதனை நிறைவு செய்ய கடந்த 7 வருடங்களை எடுத்துக் கொண்டுள்ளார்.
நூல் பற்றி…
மலையக மக்கள் தொடர்பான அவருடைய ஆழ்ந்த நோக்கு புலப்படுவதை காண முடிகின்றது.
நூலில் இலங்கை வாழ் நான்கு பிரதான சமூகம் பற்றி குறிப்புகளை கொண்டுள்ளதுடன் இந்திய வம்சாவளி மக்கள் என இனங்காட்டப்படும் மக்கள் இன்றும் நிலத்தொடர்பற்ற சமூகமாக விளங்குவதாக குறிப்பிடுகின்றார்.
அத்துடன் உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும்.
அரசியல் தீர்வு, மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்த பார்வை.
பாராபட்சமற்ற உரிமை மறுப்பு, தமிழ் மொழி மூல இலவச கல்வி போன்ற விடயங்களுடன் மலையக மக்கள் தொடர்பான தூர நோக்கி பார்வையினை காண முடிகின்றது.
200 ஆண்டுகளை எட்டும் மலையக மக்களின் வரலாற்றில் அவர்கள் தங்கள் கல்வி கலாசாரம் பண்பாடுகளை இன்று காத்துவருகின்றமை காணமுடிகின்றது.
எது எவ்வாறாயினும் தாம் நிலத்தொடர்பற்ற சமூகம் என்பதை மக்கள் எப்போதும் தங்களுக்கான மந்திர வார்த்தையாக கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இவரது உரையினை தொடர்ந்து நூலின் பிரதியை ஆசிரியரிடமிருந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பெற்றுக் கொண்டார்.
எதிர்கால சந்ததியினர் இலங்கை மலையகத் தமிழா்களின் வரலாற்றைஅறிந்து கொள்ள வேண்டும்
இதனையடுத்து உரையாற்றிய பி.பி. தேவராஜ் தன் உரையில்…
இந்த நுாலை எழுதியதன் முக்கிய நோக்கம் தற்போதைய எதிர்கால சந்ததிகள் இலங்கை மலையகத் தமிழா்களின் வரலாறுகளை, அறிந்து கொள்ள வேண்டும். இந் நுாலில் மலையக மக்கள் பற்றி பல்வேறு தலைப்புக்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பெருந்தோட்ட உருவாக்கமும் நெருக்கடிகள், இலங்கைத் மலையகத் தமிழா் உள்ள பிரதேசங்கள், மாவட்ட ரீதியாக இந்திய வம்சாவலித் தமிழா்கள் விகிதாசாரங்கள், மலையகத் தமிழா்களது அடையாளச் சின்னங்கள், பரிமாணங்கள், ஆலயங்கள், தமிழ் நெறிக் கல்வி, மனித இடம்பெயா்வு ஒரு வரலாற்று பின்னனி. ஜரோப்பியா் காலத்தில் இந்தியா் இலங்கை வருகை, இறப்பா் தேயிலை பயிற்செய்கை ஜரோப்பியா் காலம், இந்தியா சுதந்திரமடைந்து மகாத்மாக் காந்தியின் செயற்பாடுகள், டொனமூர் முதல் சோல்பரி அரசியல் சட்டங்கள் வரை, மலையக மக்கள் 24 மாவட்டங்களில் வாழும் மலையக முஸ்லிம் மக்கள், மலையக அரசியல் பிரநிதிகள் போன்ற பல்வேறு தலைப்புக்களில் இலங்கை மலையகத் தமிழா் வரலாறுகள் எழுதப்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் 700 பேர் பட்டதாரிகளாக நுழைவதென்பது ஒர் சிறந்த கல்வி முன்னேற்ற வளா்ச்சியாகும்
இந்திய உயா்ஸ்தாணிகரின் உரையில்…
இவ்வாறானதொரு நூலின் உருவாக்கம் என்பது சிறப்பானதொரு விடயமாகும்.
இது மலையக வாழ் மக்களின் வரலாறு மட்டுமல்ல அடையாளமும் கூட.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சத்தினா்கள் வாழ்வதாரம், கல்வி, வீடமைப்புகள் அவா்களது மேம்பாட்டுக்கு உதவுவது இந்தியாவின் கடமையாகும்.
இலங்கையில் மலையகத்தில் வாழும் மாணவா்களது கல்வி வளா்ச்சியில் க.பொ.த. உயார் தரத்தில் சித்தியடைந்து இலங்கையில் உள்ள ஜந்து பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் 700 பேர் பட்டதாரிகளாக நுழைவதென்பது ஒர் சிறந்த கல்வி முன்னேற்ற வளா்ச்சியாகும். மலையக வாழ் மாணவா்களது. கல்வி மேம்பாட்டுக்காக மலையக மக்கள் வாழும் மலையகப் பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலத்தில் சிறந்த முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கு. ஆரம்பக் கல்வி, சாதாரண தரம், உயா்தரம் மற்றும் உயா்கல்விக்கு இந்திய அரசாங்கம் எமது உயா்ஸ்தாணிகர் ஊடக உதவும். நமது பொருளாதார வளா்ச்சிக்கு நாம் கல்வியிலேயே மட்டுமே முன்னேறுவது சிறந்ததாகும். கண்டியில் உள்ள இந்தியத் துாதரகம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்களாகும். அத்துடன் 200 வருடங்கள் முன்பு இந்தியத் தமிழா்களை இலங்கையின் தேவைக்காகவே அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும் எனவும் இந்திய உயா்ஸ்தாணிகா் அங்கு தெரிவித்தார்.
நிகழ்சி ஒருகமைப்பாகளர் பாலசுப்பிரமணியத்தின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக நூலின் ஆசிரியர் பீ. பீ. தேவராஜின் பேத்தி அஹானா நூல் வெளியீட்டுக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தகது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM