அனைத்து  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்  வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து  முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை மீறி  பாராளுமன்ற வளாகத்துக்குள் நுளைய முற்பட்டதையடுத்து கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்களில் சிக்கிய மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.