ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் முதல் தடவையாக ஒருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தலையை மறைக்கும் ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாஷா அமினி எனும் யுவதி, பொலிஸ் காவலில் இருந்தபோது கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து, ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஏற்கெனவே சுமார் 2,000 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், மேலும் 750 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்துடன் தொடர்பில் ஒருவருக்கு முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை இணையத்தளமான மிஸான் தெரிவித்துள்ளது.
அரச கட்டடங்களுக்கு தீவைத்தல், பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தல், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களுக்காக ஒன்றுதிரண்டமை மற்றும் சதிசெய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த இணைத்தளம் தெரிவித்துள்ளது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 326 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நோர்வேளையை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் எனும் அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM