நமது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத இயற்கையான ஒரு விடயம் முதுமை. வயது ஏற ஏற நமது சருமம் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
வயதாகும் போது சரும சுருக்கம், தோலின் தன்மை மந்தமாவது, சீரற்ற ஸ்கின் டோன், வறண்ட சருமம், ஏஜ் ஸ்பாட்ஸ், தோலின் அமைப்பு கரடுமுரடாக மாறுவது உள்ளிட்ட பல சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்களுக்கும் குறைபாடற்ற சருமத்திற்கும் இடையே ஒரு ஆழமான தொடர்பு இருப்பதாக குறிப்பிடுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இதனிடையே பிரபல காஸ்மெட்டாலஜிஸ்ட் நிபுணரான டாக்டர் கீதிகா மிட்டல் குப்தா வயதானாலும் சருமத்தின் அழகை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள கீதிகா மிட்டல், நம் சரும ஆரோக்கியத்தை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் முக்கியமானவை என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில் "முதுமை தவிர்க்க முடியாதது, அதை ஏன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?' என்ற கேள்வியை கேப்ஷனாக்கி சில டிப்ஸ்களையும் ஷேர் செய்து இருக்கிறார்.
சருமத்தின் வயதை மேம்படுத்த உதவும் கீதிகா மிட்டலின் எளிய டிப்ஸ் இங்கே.
எக்ஸ்ஃபோலியேட் (Exfoliate) :
நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது எக்ஸ்ஃபோலியேட். மேலும் உங்கள் சரும துளைகளுக்குள் ஆழமாக படிந்து இருக்கும் அழுக்கு மற்றும் தேவையற்ற நச்சுக்களை அகற்றி சரும சுருக்கம் மற்றும் கோடுகளை தவிர்க்க உதவுகிறது. எனவே வாரத்திற்கு 2-3 முறை எக்ஸ்ஃபோலியேட் செய்ய பரிந்துரைக்கிறார் நிபுணர் கீதிகா மிட்டல்.
ரெட்டினோல் (Retinol) :
சரும பராமரிப்பு வழக்கத்தில் ரெட்டினோலை பயன்படுத்துவது ஆன்டி-ஏஜிங் பண்புகளை உருவாக்கி கொலாஜனை அதிகரிப்பதன் மூலம், சருமத்தில் இருக்கும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. ஆரோக்கியமான சருமம் ஆரோக்கியமான உடலைக் காட்டுகிறது. எனவே உங்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை எப்போதும் பயன்படுத்துங்கள் என்று நிபுணர் கீதிகா மிட்டல் பரிந்துரைக்கிறார்.
முகபாவனைகள் (Facial Expressions) :
வயதாகும் போது முக அசைவுகள் மற்றும் முகபாவங்கள், கண் சிமிட்டுதல் அல்லது அதிகமாக சிரிப்பது போன்றவை முகத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வழிவகுக்கும். ஒவ்வொரு முறையும் நாம் முக தசையைப் பயன்படுத்தும்போது, தோலின் மேற்பரப்பிற்கு கீழே ஒரு பள்ளம் உருவாகிறது. மேலும் சருமத்திற்கு வயதாகும் போது, அது அதன் நெகிழ்வுத்தன்மையை இழந்து, மீண்டும் அந்த பள்ளத்தை நிரப்ப முடியாமல் போகிறது. எனவே அடிக்கடி செய்யப்படும் ஃபேஸ் எக்ஸ்பிரஷன்களை தவிர்ப்பது நல்லது என்கிறார்.
ஆல்கஹாலுக்கு நோ (No to Alcohol) :
தொய்வான, வறண்ட மற்றும் சுருக்கமான சருமத்தை தவிர்க்க மதுபழக்கத்தை கைவிட வலியுறுத்துகிறார். இந்த பழக்கத்தால் உடலில் ஏற்படும் நீரிழப்பு சருமத்தின் ஈரப்பதம், நெகிழ்ச்சித்தன்மையை போக்குகிறது. இதனால் வறண்ட சருமம், சுருக்கங்கள் உள்ளிட்டவை ஏற்படுகிறது என்கிறார்.
சீரான டயட் (A balanced diet) :
உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் சீரான மற்றும் ஆரோக்கியமான காய்கறிகள் & பழங்கள் அடங்கிய டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும அழகு மற்றும் பளபளப்பை பராமரிக்க முக்கிய ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய உணவுகள் உங்கள் டயட்டில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
சன்ஸ்கிரீன் (Sunscreen) :
பலரும் சன்ஸ்கிரீன் வெயில் காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நினைத்து கொள்கிறார்கள். ஆனால் ஆண்டின் எல்லா சீசனிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள். மந்தமான கிளைமேட்டாக இருந்தாலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அடுக்காக சன்ஸ்கிரீன் செயல்படுகிறது. கொலாஜன் சிதைவை தடுக்க சன்ஸ்கிரீன் உதவுகிறது என்றும் கீதிகா மிட்டல் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM