தலங்கம பொலிஸாரால் ஒருவர் சனிக்கிழமையன்று அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு தடுத்து வைத்தமை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அது தொடர்பான விவரங்களை தெளிவுபடுத்தி பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான வழமையான சோதனை நடவடிக்கைகளின் போது, தலங்கம பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதை பொலிஸ் குழுவினர் அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது வேறு எந்த ஆவணமும் அவரிடம் இல்லாத காரணத்தால், அந்த நபரின் அடையாளத்தை அப்போது உறுதி செய்ய முடியாமல் போனது.
எனவே, பொலிஸ் துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, அவரைத் தடுத்து வைத்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த நபரின் தொழில் வழங்குனர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அந்த நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் பட்சத்தில், செயல்முறையை எளிதாக்குவதற்காக, தங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்காக தங்களுடைய தேசிய அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் மேலும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM