குரங்கம்மை என்பது ஒரு வைரஸ் நோயாகும். உலக சுகாதார அமைப்பானது (WHO) உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இந்த நோயை அறிவித்துள்ளது.
உலகளவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், குரங்கம்மை வைரஸ் மாறி வருகிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜர்னல் ஆஃப் ஆட்டோ இம்யூனிட்டி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள், குரங்கம்மைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை நன்கு புரிந்துகொள்ள உதவுவதோடு, இந்த பிறழ்வுகளை எதிர்கொள்ளும் புதிய மருந்துகளை உருவாக்கவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
வைரஸின் மாற்றம்:
இது குறித்து ஆய்வளார்கள் கூறுவதாவது,
"தற்காலிக பகுப்பாய்வு செய்வதன் மூலம், காலப்போக்கில் வைரஸ் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை எங்களால் பார்க்க முடிந்தது.
ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், வைரஸ் இப்போது உருமாற்றத்தை பெறுகிறது. குறிப்பாக தடுப்பூசிகளில் இருந்து மருந்துகள் மற்றும் ஆன்டிபட்டிகள் பிணைக்கப்படும்போது இது நிகழ்கிறது" என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த வைரஸ் புத்திசாலித்தனமாகி வருகிறது. மேலும் அதிகமான மக்களுக்கு இது தொடர்ந்து பரவுகிறது," என்றும் கூறினர்.
ஆய்வு பற்றி:
குரங்கம்மை வைரஸின் 200 க்கும் மேற்பட்ட விகாரங்களின் டிஎன்ஏ வரிசைகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
1965 ஆம் ஆண்டு முதல் குரங்கு அம்மை பரவத் தொடங்கிய காலகட்டம், பின்னர் 2000-களின் முற்பகுதியில் தொடங்கிய பரவல் மற்றும் இறுதியாக 2022-இல் மிக அண்மைய பரவல் வரை இதில் அடங்கும்.
டிஎன்ஏ பாலிமரேஸ், டிஎன்ஏ ஹெலிகேஸ், பிரிட்ஜிங் புரோட்டீன் ஏ22ஆர், டிஎன்ஏ கிளைகோசைலேஸ் மற்றும் ஜி9ஆர் ஆகிய ஐந்து குறிப்பிட்ட புரதங்களை இதில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் கண்டறிந்தவை:
டிஎன்ஏ மரபணு பிணைப்பை பாதிக்கும் முக்கியமான புள்ளிகளிலும், மருந்துகள் மற்றும் தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகள் பிணைக்கப்பட வேண்டிய இடங்களிலும் பிறழ்வுகள் ஏற்படுவதை கண்டறிந்ததாக முன்னணி ஆராய்ச்சியாளர் கமலேந்திர சிங் கூறினார். "இந்த காரணிகள் நிச்சயமாக வைரஸின் அதிகரித்த தொற்றுநோய்க்கு வழி வகுக்கின்றன. மேலும், இந்த ஆய்வானது மிகவும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு குழு முயற்சி, " என்று அவர் மேலும் கூறினார்.
குரங்கு அம்மை: மே 2022 இல் குரங்கு அம்மை திடீரென உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. யுனைடெட் கிங்டம், போர்ச்சுகல் மற்றும் இத்தாலியில் அதிக பரவல்கள் ஆரம்பித்தன. பெரும்பாலும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களை இது பாதித்திருந்தது. சில மாதங்களுக்குள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 73,000க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் 29 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சமீபத்திய வாரங்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM