800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - ஐ.நா. தகவல்!

Published By: Digital Desk 2

14 Nov, 2022 | 10:13 AM
image

இன்னும் சில நாட்களில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 வீதம் மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் குறைவாக பதிவானது.

இந்நிலையில் வரும் பதினைந்தாம் திகதியுடன் உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பாராட்டு

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள்தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுறது. 

இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தன்று ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையின்படி, நவம்பர் 15 ஆம் திகதியோடு உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்டு நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.

800 கோடியை எட்டுகிறது உலக மக்கள் தொகை

அதோடு வரும் காலத்தில் உலகின் மக்கள் தொகை பெருக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்கிற கணிப்பையும் ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 2030 ஆம் ஆண்டு உலகின் மக்கள்தொகை 850 கோடியை தாண்டிவிடும் என்றும், 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 950 கோடியை தாண்டிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. .

கொங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்திருக்கும் என்றும், ஆசியாவின சில நாடுகள், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் எதிர்மறையாக இருக்கும் எனவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து விடும் என்பதால் மக்கள் தொகைப் பெருக்கத்தில் தாமதம் ஏற்படும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் தொகை அதாவது 25 முதல் 64 வயதுவரையிலான மக்கள் தொகை அதிகம் இருக்கும் எனவும், இதனால் பொருளாதாரம் உயர்ந்து தனி மனித வருவாயும் அதிகரிக்கும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.

இது நம்முடைய பன்முகத்தன்மையை கொண்டாடும் நேரம் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10