பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு

13 Nov, 2022 | 08:52 PM
image

எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். 

எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் எமது மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில் கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

இதற்காக வருகிற செவ்வாய் கிழமை நவம்பர் 15ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் ஒன்று கூடுமாறு கட்சித் தலைவராகிய உங்களை அன்போடு அழைக்கிறோம். காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு நீங்கள் சமூகம் தருவீர்கள் என்று நம்புகிறோம் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்...

2023-02-06 16:21:47
news-image

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்...

2023-02-06 14:52:24
news-image

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ...

2023-02-06 14:51:06
news-image

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்...

2023-02-06 16:56:38
news-image

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம்...

2023-02-06 14:59:52
news-image

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு...

2023-02-06 16:13:59
news-image

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு...

2023-02-06 16:59:35
news-image

பான் கீ மூன் - ஜனாதிபதி...

2023-02-06 16:58:59
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட...

2023-02-06 16:53:21
news-image

கும்புக பிரதேச விபத்தில் சிக்கி உயிரிழந்த...

2023-02-06 16:36:31
news-image

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப்...

2023-02-06 16:11:49
news-image

கிழக்கு மாகாண எல்லைக்குள் நுழைந்து பேரணி

2023-02-06 15:40:56